திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. கலையரங்கம் திருமண மண்டபம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பேருந்தின் இருக்கை ஒன்று கழன்று வெளியே வந்து விழுந்தது. இதில் அந்த இருக்கையில் அமர்ந்திருந்த நடத்துனருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த பயணிகள் நடத்துனரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பேருந்தின் ஓட்டுநர் ரோட்டில் கிடந்த இருக்கையை எடுத்து பேருந்தில் போட்டு பணிமனைக்கு சென்றார்.
ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று கண்டக்டர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.