ஜம்மு காஷ்மீர் தோடா மாவட்டத்தில் அசார் என்ற பகுதியில் 55 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த மீட்பு படையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்க ஹெலிகாப்டரும் வரவழைக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.