முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கு ரத்து

2022-ம் ஆண்டு விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக திமுக பிரமுகர் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பெயரில் திண்டிவனம் போலீசார் சி.வி.சண்முகம் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானது தான், அவரது பேச்சை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய முடியுமா? என்று காவல்துறையிம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதாலேயே இந்த பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

RELATED ARTICLES

Recent News