பேனா நினைவு சின்னம் தடைக்கோரிய வழக்கு..! தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு..!

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் இலக்கிய பணிகளை பெருமை படுத்தும் வகையில், மெரினா கடற்கரையில் பேனா வடிவிலான நினைவு சின்னம் அமைக்கப்பட உள்ளது. ரூ.80 கோடி செலவில் உருவாக்கப்படும் இதற்கு, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் இதனை தடைகோரி பல்வேறு அமைப்புகள் வழக்கில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.