தமிழக அரசுக்கு மத்தியக் குழு பாராட்டு!

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் மத்தியக் குழுவினர் நேற்று சென்னை வந்தடைந்தனர்.

மிக்ஜம் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். மற்றொரு குழுவினர் வட சென்னை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:

வேளச்சேரி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி கூறியது: “மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் மூலம் வந்துள்ள எனது தலைமையிலான 6 பேர் கொண்ட குழு, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறோம்.

புயல் மற்றும் கனமழை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பல இடங்களில் மழைநீர் தேங்கி நின்றதை அறிகிறோம். மாநில அரசின் வெள்ள மீட்பு பணிகள் பாராட்டத்தக்கது. தண்ணீர் தேங்கிய இடங்களில் இருந்து தண்ணீரை அகற்றியது, மின் விநியோகத்தை சீராக்கியது, தொலைத்தொடர்பு சேவை பாதிப்புகளை சரிசெய்தது என அரசு பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்துள்ளது. அதற்காக, மத்திய அரசின் சார்பாக எங்களது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

RELATED ARTICLES

Recent News