கோடை வெயிலின் தாக்கம்.. அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல்..

புதுக்கோட்டை அருகே, கோடை வெயில் அதிகரித்து வருவதையொட்டி, அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

கோடை வெயிலின் தாக்கம், தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக, பல்வேறு அரசியல் கட்சியினர் நீர்மோர் பந்தல்களை திறந்து வருகின்றனர்.

அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆறாங்கள், ராயவரம் பகுதியில், அதிமுக சார்பில், நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவை, தெற்கு மாவட்ட செயலாளர் பி.கே.வைரமுத்து துவக்கி வைத்தார்.

RELATED ARTICLES

Recent News