தமிழகம்
மூதாட்டியிடம் செயின் பறிப்பு ! சிக்கிய கொள்ளையன் !
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நன்னை கிராமத்தை சேர்ந்தவர் இவரது மனைவி பார்வதி (வயது 60). இவர் நன்னை பஸ் நிறுத்தத்தில் இருந்து அருகாமையில் உள்ள தனது மகன் வீட்டுக்கு நடந்து சென்றார்.அப்போது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அறிமுகம் இல்லாத 2 மர்ம நபர்கள் அவரிடம் பேச்சு கொடுத்தனர். பின்னர் மூதாட்டி அணிந்திருந்த ஆறரை பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றதாக தொிகிறது .இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனா்.
இதில் திருச்சி சுப்பிரமணியபுரம் சுந்தர் ராஜா முதல் தெரு பகுதியைச் சேர்ந்த பாட்டில் மணி என்கிற மணிகண்டன் (27) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.பின்னர் போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து ஆறரை பவுன் நகையை பறிமுதல் செய்தனர். இவர் மீது மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கொலை, கொள்ளை, செயின் பறிப்பு போன்ற பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் தலைமறைவாக உள்ள அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.இந்த வழக்கில் குற்றவாளியை விரைவாக கைது செய்த சப் இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சியாமளா தேவி பாராட்டினார்.
