வாணியம்பாடி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் திடீர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.
சென்னையிலிருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து வாணியாம்படி அருகே செட்டியப்பனூரில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவற்றை உடைத்துக் கொண்டு சென்றது. அப்போது எதிரே வந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த 64 பேரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 உயர்ந்துள்ளது.
இந்நிலையில் அதிகாலை முதல் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் திடீர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். இது மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.