முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பப் பதிவு சிறப்பு முகாமை தருமரியில் இன்று தொடங்கி வைத்தார்.
திமுக தேர்தல் வாக்குறுதியில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தத் திட்டத்துக்கு ‘கலைஞா் மகளிா் உரிமைத் தொகை’ பெயர் வைக்கப்பட்டு, செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்தத் திட்டத்துக்காக ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மகளிர் உரிமைத் தொகை முகாமை காலை 9,30 மணி அளவில் தொடங்கி வைத்தார்.