உடல் பரிசோதனை முடிந்து மருத்துவமனையில் இருந்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார்.
நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை ஆயிரம் விளக்கு பகுதி, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவா்கள், அவரை மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுதொடா்பாக அந்த மருத்துவமனை மருத்துவ சேவைகள் இயக்குநா் ஆா்.கே.வெங்கடாசலம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்து இன்று அவர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படுவார்” என்று அதில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் உடல் பரிசோதனை முடிந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார்.