சின்னத்திரை மற்றும் வெள்ளத்திரையில் நடிகையாக இருந்தவர் ரென்ஜுஷா மேனன். கேரள மாநிலம் ஸ்ரீகர்யம் பகுதியில் வசித்து வந்த இவர், கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், இவர் கடந்த திங்கள் கிழமை அன்று, சடலமாக கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், இவரது உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அந்த விசாரணையில், அந்த நடிகைக்கு பணத் தேவை ஏற்பட்டதாகவும், அதனால், கடந்த சில நாட்களாகவே அவர் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளாராம்.
இதனால் தான் அவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
( தற்கொலை தடுப்பு உதவி எண்கள் : DISHA – 1056, 0471-2552056 )