மிசோரம், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் வரும் நவம்பர் 7-ஆம் தேதியில் இருந்து, 30-ஆம் தேதி வரை, தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் பெறும் வெற்றி, அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால், பாஜக, காங்கிரஸ் கட்சியினர், அனல் பறக்க வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சோஹானை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதாவது, மத்திய பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகளை, ரன்தீப் சிங் சுர்ஜிவாலா குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதார விலையை, பாதிப்படைந்த நெல்களுக்கு, மாநில அரசு வழங்கவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், பவந்தர் யோஜனா திட்டம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், பெட்ரோல், விதை, மின்சாரம் ஆகியவற்றின் விலை உயர்வால், விவசாயிகள், அவதி அடைவது குறித்தும், பேசினார்.
காங்கிரஸ் கட்சி, நெல்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்கும் என்றும், விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறினார்.
நடைபெற உள்ள தேர்தலில் விவசாயிகளின் வாக்குகள் முக்கியம் என்பதால், ஒவ்வொரு கட்சியினரும், அவர்களை கவரும் வகையில், வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.