தன்னைத்தானே செருப்பால் அடித்து கொண்ட கவுன்சிலர்!

தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் வருத்தமடைந்த கவுன்சிலர் தன்னைத்தானே செருப்பால் அடித்து கொண்டார்.

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் நர்சிபட்டினம் நகராட்சி கவுன்சிலராக தெலுங்கு தேசம் கட்சியின் முலபர்த்தி ராமராஜு இருந்து வருகிறார்.

குடிநீர் வசதி, தரமான சாலைகள், கழிவுநீர் வடிகால்கள் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை தேர்தலின்போது அளித்துள்ளார்.

31 மாதங்களாகவே அவர் கேட்ட திட்டங்களுக்கு அரசு நிதி வழங்கவில்லை. இதனால் அவரால் தனது தொகுதிக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய முடியவில்லையே என ராமராஜு வருத்தம் அடைந்தார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற நகரசபை கூட்டத்தில் ராமராஜு எழுந்து, என்னை நம்பிய மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என ஆதங்கத்துடன் கூறிய அவர், திடீரென தான் அணிந்திருந்த செருப்பை எடுத்து தன்னைத்தானே சரமாரியாக அடித்து கொண்டார். அதன்பின்பு கூட்டத்தில் இருந்து அழுதபடியே வெளியேறினார்.

RELATED ARTICLES

Recent News