மத்தியப் பிரதேச மாநிலம் ஷாதோல் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி ஒருவருக்கு ஒன்றரை வயது குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு சுவாச நோய் இருந்துள்ளது.
இந்த நோயை குணப்படுத்த குழந்தைக்கு இரும்புக் கம்பியால் சூடு வைத்தால் போதும் என்ற மூடநம்பிக்கையால், அந்த தம்பதியரும் குழந்தைக்கு சூடு வைத்துள்ளனர். இதனால் அந்தக் குழந்தைக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து இதையடுத்து கடந்த டிச. 21ஆம் தேதி அந்தக் குழந்தை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.