புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையையொட்டி நகரப்பகுதியில் உள்ள கடை வீதிகளில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. இதனிடையே புதுச்சேரி,காமராஜ் சாலையில் அதிகப்படியான வாகனங்கள் சாலையின் இரு புறமும் நின்றது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்ட 50-வயது மதிக்கத்த நபர் ஒருவர் மதுபோதையில் சாலையின் நடுவே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.
பொருட்கள் எல்லாம் வாங்கி முடித்துவிட்டு பொறுமையாக நடந்து வந்துள்ளார். வாகனத்தை உடனே எடுக்காமல் சிறுது நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு அதன் பிறகு வாகனத்தை எடுத்து சென்றுள்ளார்.
சாலையின் நடுவே இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டதன் காரணமாக பிற வாகன ஓட்டிகளும் போதை ஆசாமியை பார்த்து சிரித்தபடியே சென்றனர். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.