காஞ்சிபுரம் மாநகருக்கு உட்பட்ட காந்தி சாலை தேரடி அருகே ROYAL BIRIYANI என்கிற உணவகமானது இயங்கி வருகிறது. இந்த அசைவ உணவகத்தில் நேற்று இரவு இருவர் நபர்கள் சேர்வா வாங்கிட வந்திருக்கின்றனர். அப்போது அந்த இருவரும் அவ்வுணவகத்தின் சமையலறையில் புகுந்து சேர்வா கேட்டுள்ளனர். உணவக ஊழியர்கள் உள்ளே வரவேண்டாமென தெரிவிக்க அவர்களை அந்த மர்ம நபர்கள் ஆபாச வார்த்தைகளால் பேசியிருக்கின்றனர்.
இதனால் உணவக ஊழியர்களுக்கும்,அந்த மர்ம நபர்களுக்கு வாக்குவாதமாகி சேர்வா பாட்கெட்களை தூக்கி அடித்துவிட்டு சென்றிருக்கின்றனர். இதனையெடுத்து இவர்கள் சென்றுவிட்டு சற்று நேரத்திலேயே மீண்டும் உணவகத்திற்கு வந்து அங்கிருந்த உணவக ஊழியர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.

அங்கிருந்த பொருட்களையெல்லாம் தூக்கி அடித்து அராஜகத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதில் உணவக ஊழியர் இரண்டு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையெடுத்து இருவருக்கும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விஷ்ணு காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கைபற்றி அராஜகத்தில் ஈடுபட்ட நான்கு பேரை தேடி வருகின்றனர். மேலும் அவர்கள் விட்டு சென்று இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதலும் செய்திருக்கின்றனர்.