Connect with us

Raj News Tamil

சந்திரமுகி படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட்டையும் சம்பளமாக வாங்கிய கங்கனா..!

சினிமா

சந்திரமுகி படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட்டையும் சம்பளமாக வாங்கிய கங்கனா..!

பி.வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தியிருந்தது.

18 ஆண்டுகளுக்கு பிறகு, ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் உருவான இந்த படத்தின் 2-ஆம் பாகம் நாளை உலகமுழுவதும் வெளியாகயுள்ளது. இப்படத்திற்கு ஆஸ்க்கார் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில், இருவரும் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. அதன் படி, ராகவா லாரன்ஸ் 15 கோடி ரூபாயும், கங்கனா ரனாவத் 20 கோடி ரூபாயும் சம்பளமாக வாங்கியுள்ளனர். ரஜினி நடித்த சந்திரமுகி படத்தின் முழு பட்ஜெட்டே 19 கோடி ரூபாய் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top