வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வாத்தி.தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான இந்த படம், வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. சுமார் 40 கோடி பட்ஜெட்டில் உருவான வாத்தி திரைப்படம், இதுவரை ரூ.100 கோடியை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா, வாத்தி படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.