உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த 17-ஆம் தேதி வெளியான திரைப்படம் ”கண்ணை நம்பாதே”. நடிகை ஆத்மிகா ஜோடியாக நடித்த இந்த படத்தை, இரவுக்கு ஆயிரம் கண்கள் இயக்குனர் இயக்கியிருந்தார். இந்த நிலையில் நாயகி ஆத்மிகா தனது தாத்தாவுடன் திரையரங்கிற்கு சென்று படத்தை பார்த்துள்ளார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், புகைப்படத்துடன் பகிர்ந்துள்ள இவர், மகிழ்ச்சி என்பது தாத்தாவின் முகத்தில் பெருமிதம் பிரகாசிப்பதை பார்ப்பது. 90-வயதை தாண்டியவர், பேத்தியின் படத்தை பார்ப்பதற்கு சிரமமின்றி படிக்கட்டுகளில் ஏறியது என்று பதிவிட்டுள்ளார். ஆத்மிகாவின் பதிவை பார்த்தை ரசிகர்கள், அவரை பாரட்டி வருகின்றனர்.