Connect with us

Raj News Tamil

காலமானார் பிரபல குணச்சித்திர நடிகர்!

சினிமா

காலமானார் பிரபல குணச்சித்திர நடிகர்!

பிரபல திரைப்பட நடிகராக தமிழ் சினிமாவில் வளம் வந்தவர் ஆர்.எஸ்.சிவாஜி. நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான ‘அபூர்வ சகோதர்கள்’ திரைப்படத்தில் ஜனகராஜ் உடன் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்த இவரின் நடிப்பு மக்களிடையே அதிகம் பேசப்பட்டது .இப் படத்தில் இவர் பேசிய ‘தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டீங்க’ என்ற வசனம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலாமான ஒன்றாகும்.

இவர் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். சாய் பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘கார்கி’ திரைப்படத்தில் ஆர்.எஸ்.சிவாஜியின் நடிப்பு பல்வேரின் பாராட்டுக்களை பெற்றது . இந்நிலையில், 66 வயதான ஆர்.எஸ்.சிவாஜி , உடல் நலக்குறைவால் இன்று காலமானார் ,இவரின் மறைவுக்கு திரைத்துறையினரும் ,பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top