Connect with us

Raj News Tamil

தனது மனைவியுடன் படுகொலை செய்யப்பட்ட பிரபல சினிமா தயாாிப்பாளா்!

உலகம்

தனது மனைவியுடன் படுகொலை செய்யப்பட்ட பிரபல சினிமா தயாாிப்பாளா்!

ஈரானில் பிரபல சினிமா தயாரிப்பாளராக இருந்தவர் தரியூர் மெஹர்ஜூய் (வயது 83). இவரது மனைவி வஹிதே முகமதிபர். இவர்கள் இருவரும் தெக்ரான் அருகே உள்ள கராஜில் வசித்து வந்தனர். இந்நிலையில் ,நேற்று முன்தினம் தரியூர் மெஹர் ஜூய் தனது மகள் மோனாவை இரவு உணவுக்காக வீட்டுக்கு வருமாறு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதாக தொிகிறது.

இதையடுத்து சுமார் 1 மணி நேரம் கழித்து மோனா வீட்டுக்கு வந்தார். அப்போது பெற்றோர் கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னா் ,இது பற்றி அவர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளாா். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதன்படி ,சந்தேகத்தின் பேரில் 4 பேரை போலீசார் பிடித்தனர். இதில் 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் ,அவர்களிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top