Connect with us

Raj News Tamil

ரசிகர்கள் மீது மைக்கை வீசிய பிரபல ராப் பாடகி!

உலகம்

ரசிகர்கள் மீது மைக்கை வீசிய பிரபல ராப் பாடகி!

அமெரிக்காவில் பிரபல ராப் பாடகி கார்டி பி நிகழ்ச்சி ஒன்றில் நடனமுடன் ரசிகர்கள் அருகில் பாடி கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த சிலர் அவர் மீது குளிர்பானத்தை வீசி எறிந்தனர். இதனால் கோபம் அடைந்த கார்டி பி தான் கையில் வைத்திருந்த மைக்கை அவர்களை நோக்கி வீசி எறிந்தார்.

இதனைத் தொடர்ந்து பாதுகாவலர்கள் அந்த ரசிகர்களை சுற்றி வளைத்து பிடித்து அவர்களை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கார்டி பி மீது ஒருவர் மட்டும் குளிர்பானத்தை வீசி தாக்கினாரா? அல்லது இளைஞர்கள் கும்பலாக சேர்ந்து தாக்கினார்களா? என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்றது.

இதுபோன்ற நிகழ்ச்சியின் போது பாடகர்கள் ரசிகர்களால் தாக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. கடந்த மாதம் வேல்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது பாடிக்கொண்டிருந்த கார்டி பி மீது ரோஜா பூங்கொத்துகளை ரசிகர்கள் வீசி எறிந்தது குறிப்பிடத்தக்கது.

More in உலகம்

To Top