படம் பிளாப்.. சம்பளம் வாங்க மறுத்த வாத்தி பட நடிகை..!

அண்மையில் வெளியான வாத்தி படத்தில் நாயகியாக நடித்தவர் சமுயுக்தா. இதில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து, பலரது பாராட்டை பெற்ற இவர், இப்படத்தின் வெற்றிக்கு பிறகு, படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் சமுயுக்தா நடிப்பில் மலையாளத்தில் வெளியான எடக்காடு பட்டாலியன் திரைப்படம் படுதோல்வி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படத்தில் நடித்ததற்கான பணத்தை வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதாவது படத்திற்கு முன்னதாக 65 சதவீதம் சம்பளத்தை வாங்கிய சமுயுக்தா, படத்தின் தோல்வியால் மீதி பணம் வேண்டாம் என மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.