இந்திய நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் பணிகளில் தீவிரம் காட்டிவருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு இன்று வெளியிட்டார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், “கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை விட தற்போது கூடுதலாக 7 லட்சம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் 13.61 லட்சம் பேர் புதிதாக பெயர் சேர்த்துள்ளனர்.
மேலும், 6.02 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 3.23 லட்சம் வாக்களர் திருத்தம் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.” என்றார்.