பாத்திரத்துக்குள் சிக்கிய சிறுமி…போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தண்ணீர் பந்தலை சேர்ந்தவர் பூபதி. இவருடைய இரண்டு வயது மகள் மிதுலா ஸ்ரீ வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டில் இருந்த சில்வர் தண்ணீர் பாத்திரத்தில் சிக்கியுள்ளார்.

பாத்திரத்தில் மாட்டிக்கொண்ட மிதுலா ஸ்ரீ வெளியே வர முடியாமல் கதறி அழுதுள்ளார். குழந்தையின் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் குழந்தை சில்வர் பாத்திரத்தில் மாட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த குழந்தையை மீட்க போராடியுள்ளனர். பின்னர் இது குறித்து குழந்தையின் பெற்றோர் நாட்றம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புதுறையினர் பாத்திரத்தை இரண்டாக வெட்டி பிளந்து குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர்.

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பாத்திரத்தில் மாட்டிக் கொண்ட சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

RELATED ARTICLES

Recent News