தமிழ்நாடு அரசு போக்குவரத்து நிறுவன ஊழியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதால், வழக்கறிஞா் பா.ராம்குமாா் ஆதித்தன் ,மதுரை கிளை நீதிபதிகள் கிருஷ்ணகுமாா் , விஜயகுமாா், ஆகியோரின் அமா்வில் முறையீடு செய்துள்ளாா்.
பொங்கல் பண்டிகை நெருங்கிகொண்டிருக்கிறது, இந்நேரத்தில் போக்குவரத்து ஊழியா்களின் வேலை நிறுத்தத்தினால் மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்வதற்கு கடும் அவதிக்குள்ளாவா்.இதனால், இவா்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்திருப்பது சட்டவிரோதம் என்றும் ,இவா்களின் ஸ்டிரைக்கிற்கு தடைவிதிக்கவேண்டும் எனவும் இந்த வழக்கை உடனடி வழக்காக எடுத்து கொள்ள வேண்டும் என்று முறையீடு செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நாளை இந்த வழக்கையே முதல் வழக்காக எடுத்துக்கொள்வதாக தற்போது உத்தரவிட்டுள்ளனா். இதனால், இனியாவது இதற்கு நிரந்தர முடிவு கிடைக்குமா என்று பொதுமக்கள் பலரும் விமர்சனம் செய்து புலம்பி வருகின்றனா்.