மகிழ் திருமேனி இயக்கத்தில், லைக்கா தயாரிப்பில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 14ஆம் தேதி அன்று படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது.
விடாமுயற்சி என்ற டைட்டிலுக்கு பிறகு வேறு எந்த போஸ்டரும் வெளியாகாத நிலையில் தற்போது பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளதால் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.