இன்று காலை பழைய நாடாளுமன்ற வளாகத்தில் சிறப்புக் கூட்டத்தில் நடைபெற்றது. பின்னர் பகல் 12.45 மணியளவில் பழைய நாடாளுமன்ற வளாகத்திலிருந்து புதிய கட்டடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் பேரணியாக சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, பகல் 1.15 மணியளவில் மக்களவையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு அவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் முதல் கூட்டம் தொடங்கியது.
இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், ராகுல் காந்தி மற்றும் அனைத்துக் கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்றனர்.