பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி நேற்று பதவியேற்றார்.
அவருடன் பாஜக மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர் உள்பட 71 மத்திய அமைச்சர்கள் பதவியேற்றனர்.
மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடி விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கான கோப்பில் தனது முதல் கையெழுத்தை இட்டுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள சுமார் 9.3 கோடி விவசாயிகளுக்கு மொத்தம் 20 ஆயிரம் கோடி வழங்குவதற்காக மோடி கையெழுத்திட்டார்.
இது பற்றி பேசிய மோடி, முதல் நடவடிக்கை விவசாயிகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டிருப்பதன் மூலம், விவசாயிகளின் வாழ்வுக்காக எங்கள் அரசு முழு அர்ப்பணிப்புடன் இருப்பதை காட்டுகிறது. வருங்காலங்களில் விவசாயிகள், விவசாயத் துறைக்காக அதிகம் உழைக்கவிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.