சாக்லேட் எடுப்பதற்காக ஃபிரிட்ஜை திறந்த சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்..!!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் நவிப்பேட்டையை சேர்ந்த ரித்திஷா என்ற 4 வயது சிறுமி தனது தந்தையுடன் அங்கிருந்த சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது சாக்லேட் எடுப்பதற்காக, சூப்பர் மார்க்கெட்டில் உள்ள பிரிட்ஜை சிறுமி ரித்திஷா திறந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை உடனே சிறுமியை காப்பாற்றி அருகில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்.

சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் மேல்சிகிச்சைக்காக நிஜாமாபாத்துக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இதையடுத்து நிஜாமாபாத்துக்கு சிறுமியை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News