காதலை ஏற்க மறுத்த சிறுமி: தாயின் கண்முன்னே கொலை செய்த இளைஞர்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தன் காதலை ஏற்க மறுத்த 12 வயது சிறுமியை, அவரது தாய் கண்முன்னே சரமாரியாக குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீஸ்கான் பகுதியில் சேர்ந்த 12 வயது சிறுமியிடம் ஆதித்யா காம்ப்ளி என்ற 20 வயது இளைஞர் காதலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், சிறுமி கதலை ஏற்க மறுத்துவிட்டதால், கடந்த புதன்கிழமை மாலையில் டியூஷன் முடிந்து தனது தாயுடன் வீடு திரும்பிய சிறுமியை, காம்ப்ளி கத்தியால் குத்தினார். தடுக்க முயன்ற தாயை கீழே தள்ளிவிட்டு, சிறுமியை சரமாரியாக குத்தியுள்ளார்.

பின்னர், இளைஞர் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார் ஆனால் அக்கம்பக்கம் இருந்தவர்கள் சுற்றிவளைத்தனர். அப்போது, தான் வைத்திருந்த கிருமிநாசினி திரவத்தை குடித்து, தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனிடையே, மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட சிறுமி, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலையாளி காம்ப்ளி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவா் மீது இந்திய தண்டனையியல் சட்டத்தின் 302 (கொலை), 309 (தற்கொலைக்கு முயற்சித்தல்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

RELATED ARTICLES

Recent News