சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர் ஜெ.பாரத். இவர் எழுதிய திருமாவின் சிந்தனை கோட்பாடுகள் எனும் நூல் வெளியீட்டு விழா, அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நூலை வெளிட்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், தமிழ்தேசிய இயக்கத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் பங்களிப்பு மகத்தானது என்றார். தமிழ் தேசியம் என்ற பெயரில் பிற இனத்தின் மீது உமிழக்கூடாது என்ற அவர், தமிழ்த் தேசியம் சாதி ஒழிப்பை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய திருமா, தமிழ்நாடு எனும் தனிநாடு அமைப்பதே தமிழ்த்தேசியத்தின் இலக்காக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி வழி தேசியம் வளர்த்தெடுக்கப்பட்டு அதன் ஒன்றியமாகத்தான மத்திய அரசு இருக்க வேண்டும் என்றார்.