தி கோட் 3-வது பாடல் எப்போது? படக்குழுவினர் அறிவிப்பு!

விஜயின் தி கோட் படம், வரும் செப்டம்பர் 5-ஆம் அன்று ரிலீஸ் ஆக உள்ளது. இன்னும் ரிலீசுக்கு ஒரு மாதம் மட்டுமே இருப்பதால், படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தற்போது படத்தின் 3-வது பாடலை ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதாவது, இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், தி கோட் படத்தின் 3-வது சிங்கிள், ஆகஸ்டு 3-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆகிறது என்று கூறியுள்ளார். மேலும், அடுத்த அப்டேட், நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News