தி கோட் இசை வெளியீட்டு விழா எப்போது?

விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் தி கோட். சயின்ஸ் பிக்ஷன் பாணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை, ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு தொடர்பான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, வரும் ஆகஸ்டு மாதத்தின் 3-வது வாரத்தில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க வாய்ப்புகள் உள்ளதாம்.

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு நடக்கும் முதல் இசை வெளியீட்டு விழா இது என்பதால், அவரது பேச்சு எப்படி இருக்கும்? குட்டி ஸ்டோரி எதை வைத்து சொல்வார் என்ற எதிர்பார்ப்பில் உள்ள ரசிகர்களுக்கு, இந்த தகவல், உற்சாகத்தை அளித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News