Connect with us

Raj News Tamil

இன்னும் சில நாட்கள்.. The GOAT படத்தின் முக்கிய அப்டேட்..

சினிமா

இன்னும் சில நாட்கள்.. The GOAT படத்தின் முக்கிய அப்டேட்..

லியோ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, நடிகர் விஜய் தி கோட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டை கேட்கும்போதும், படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தொடர்பான முக்கியமான தகவல் கசிந்துள்ளது. அதாவது, இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, இதுவரை 3 பாடல்களை கம்போஸ் செய்து முடித்துள்ளாராம்.

இந்த 3 பாடல்களில், ஏதேனும் ஒன்றை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தி கோட் படத்தின் ஷீட்டிங்கை மார்ச் மாதமே முடித்துவிட்டு, 3 மாதங்களில் பின்னணி பணிகளை முடித்துவிட்டு, விஜயின் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி அன்று, படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.

இதனால், இப்போதில் இருந்தே படத்தின் ஒவ்வொரு அப்டேட்களையும் வெளியிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top