ரிலீசுக்கு முன்பே பலகோடி லாபம் பெற்ற தி கோட்!

விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தி கோட். 333 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி அன்று, ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில், ரிலீஸ்-க்கு முன்பே, இப்படம் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, அனைத்து மாநில திரையரங்க உரிமை, வெளிநாட்டு திரையரங்க உரிமை, டிஜிட்டல் உரிமை, தொலைக்காட்சி உரிமை என அனைத்து உரிமைகளில் இருந்தும், 416 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

333 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ரிலீஸ்-க்கு முன்பே, 416 கோடி ரூபாய் வசூலித்துள்ள தகவல், ரசிகர்களை உற்சாகம் ஆக்கியுள்ளது.

RELATED ARTICLES

Recent News