Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

கால்-ஐ வாரிய நிறுவனம்.. தி கோட் படத்திற்கு சிக்கல்..

சினிமா

கால்-ஐ வாரிய நிறுவனம்.. தி கோட் படத்திற்கு சிக்கல்..

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில், சயின்ஸ் பிக்ஷன் பாணியில் உருவாகி வரும் திரைப்படம் தி கோட். இப்படத்தில், இளமை-முதுமை என்று இரண்டு வெவ்வேறு கதாபாத்திரங்களில் விஜய் நடித்து வருகிறார்.

இதில், இளமையான கதாபாத்திரத்தை திரையில் கொண்டு வருவதற்கு, டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த, படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

இதன்காரணமாக, படத்தின் ஷீட்டிங் தொடங்கிய நாளில் இருந்தே, கிராபிக்ஸ் பணிகளுக்கான வேலை, தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.

ஆனால், டீ ஏஜிங் பணிகள் முடிப்பதற்கு இன்னும் அதிக நாட்கள் வேண்டும் என்று, அந்த பணியை செய்து வந்த நிறுவனம் கூறியுள்ளதாம்.

இந்த பணிகள் முடிவதற்கு தாமதம் ஏற்படுவதால், தி கோட் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக, கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.

More in சினிமா

To Top