தளபதி விஜய் தற்போது தி கோட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம், வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
மேலும், இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆக இருப்பதாகவும், படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், தி கோட் படத்தின் ரன்னிங் டைம் என்ன என்பது தெரியவந்துள்ளது.
அதன்படி, இப்படம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடும் என்று தகவல் கசிந்துள்ளது. 2 மணி நேரத்திற்கு மேல் படங்கள் இருந்தாலும் கவலை அடையும் ரசிகர்கள், இப்படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக கூறி, இப்போதில் இருந்தே கவலை அடைந்துள்ளனர்.
ஆனால், திரைப்படம் சுவாரசியமாக இருந்தால், இது ஒரு பிரச்சனையே கிடையாது என்றும் சிலர் பேசி வருகிறார்கள்.