பிரசவத்திற்காக சென்ற பெண்ணின் வயிற்றில் கத்திரிகோல் வைத்து தைத்த அரசு மருத்துவர்கள்!

ஆந்திரா மாநிலத்தில் பிரசவத்திற்காக சென்ற பெண்ணின் வயிற்றில் கத்திரிகோலை வைத்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்.

ஏளூர் அரசு மருத்துவமனையில் ஏப்ரல் 19-ம் தேதி அப்பெண் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இருந்த நிலையில், கடந்த 4 மாதங்களாக அவர் வயிற்றில் வலியில் அவதிப்பட்டு வந்துள்ளார். இறுதியாக மருத்துவமனைக்கு சென்று எக்ஸ்ரே செய்து பார்த்த போதுதான் வயிற்றில் கத்தரிக்கோல் இருப்பது தெரிய வந்தது.

விஜயவாடா மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்ட பெண்ணை அரசு மருத்துவர்கள் யாருக்கும் தெரியாமல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிகிறது. இதற்குக் காரணமானவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News