கேரளா மாநிலம், காசர்கோடில் வீட்டின் வெளியே 5 மற்றும் 2 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, காரை பார்க் செய்வதற்காக குழந்தைகளின் தாத்தா காரில் வீட்டிற்குள் வந்துள்ளார்.
அப்போது, 2 வயது குழந்தை காரின் முன்னால் போய் நின்றதை அறியாத அவருடைய தாத்தா தொடர்ந்து காரை இயக்கும் போது குழந்தை காரின் முன் சக்கரத்தில் மாட்டி கொண்டுள்ளான்.
பின்னர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.