அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் உயிரிழப்பு!

ஜிம்மில் அதிக நேரம் உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் சேட்டு என்ற மகாதிர் மகமுத் (35). இவர் குகை ஆற்றோர வடக்கு தெருவில் ஜிம் நடத்தி வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளார். இரவு 8 மணி அளவில் ஜிம்மில் இருந்தவர்கள் அனைவரும் உடற்பயிற்சி முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இவர் மட்டும் தொடர்ந்து உடற்பயிற்சியில் செய்துள்ளார்.

பின்னர் அவர் ஜிம்மில் உள்ள குளியல் அறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் மகாதிர் மகமுத் வெளியே வராததால் அவரது ஓட்டுநர் குளியலறையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மூக்கு மற்றும் காதில் ரத்தம் வழிந்த நிலையில் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளார்.

இதையடுத்த உடனே டிரைவர் முஸ்தபா மற்றும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

மேலும், இதுபற்றி தகவல் அறிந்த சேலம் போலீசார் ஜிம்மிற்கு சென்று அங்குள்ள சிசிடிவி கேமரா பதிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபட்ட அவர் நீராவியில் குளித்து உள்ளார். இதனால் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்து அவர் இறந்திருக்கலாம் என்று கூறினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News