பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவிகளின் தலைமுடியை வெட்டிய ஹாஸ்டல் வார்டன்!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கேஜிபிவி மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் ஹாஸ்டலில் தங்கி படித்து வரும் நிலையில் இன்று (நவ.18) அவர்கள் பள்ளிக்கு தாமதமாக சென்றுள்ளனர்.

பள்ளிக்கு தாமதமாக வந்த 15 மாணவிகளை ஹாஸ்டல் வார்டன் பிரசன்னா குமாரி இரண்டு மணி நேரம் வெளியில் நிற்க வைத்து, தலை முடியை வெட்டியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் வார்டன் மாணவிகளை மிரட்டி இருக்கிறார்.

இந்த தகவல் இப்போது வெளியாகியுள்ள நிலையில் அந்த வார்டனை பணியிடை நீக்கம் செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுத்துள்ளது.

RELATED ARTICLES

Recent News