Connect with us

Raj News Tamil

கடும் சாவல்களை தாண்டி சீனரின் உயிரை காப்பாற்றிய இந்திய கடலோர காவல்படை !

இந்தியா

கடும் சாவல்களை தாண்டி சீனரின் உயிரை காப்பாற்றிய இந்திய கடலோர காவல்படை !

மும்பை அருகே அரபிக் கடலில் பனமா நாட்டு கொடியுடன் ஆராய்ச்சி கப்பல் ஒன்று பயணம் செய்துகொண்டிருந்தது. அப்போது அந்த கப்பலில் இருந்த சீனாவைச் சேர்ந்தவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் ,இந்திய கடலோர காவல்படையின் உதவியை நாடினர். மருத்துவ உதவி என்பதால் உடனடியாக சீன நாட்டினர் உயிரை காப்பாற்ற இந்திய கடலோர காவல்படை கடலுக்குள் சென்றனர்.

தென்மேற்கு பருவமழை காரணமாக, வானிலை மிகவும் மோசமாக இருந்தது என்றாலும், கடலோர காவல்படை, அதை எதிர்கொண்டு கப்பலை அடைந்தனர். உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்து, ஹெலிகாப்டர் மூலம் கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர், கப்பல் ஏஜென்டிடம் ஒப்படைக்கப்ப்டார். இந்திய கடலோர காவல்படையின் துரித நடவடிக்கையால் சீன நபரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top