நெதர்லாந்து அணியை 160 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி!

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

45- வது கடைசி லீக் போட்டி நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதில் ரோகித் 61, சுப்மான் கில் 51, கோலி 51, ஷ்ரேயாஸ் ஐயர் 128, கே.எல்.ராகுல் 102, ரன்கள் எடுத்தன. 50 ஓவர் முடிவில் 410 ரன்கள் குவித்தன.

அடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணியில் அக்கர்மென் 35 ரன்களும், மேக்ஸ் ஓ டௌட் 30 ரன்களும், ஏங்கெல்ப்ரெட் 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கேப்டன் எட்வாட்ர்ஸை (17) விராட் கோலி பந்துவீசி ஆட்டமிழக்க செய்தார்.

நெதர்லாந்து அணி 47.5 ஓவர்களில் 250 ரன்கள் மட்டுமே எடுத்து, 160 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்திய அணியின் தரப்பில் பும்ரா, குல்தீப், ஜடேஜா, மற்றும் சிராஜ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். கோலி மற்றும் ரோகித் சர்மா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

நடப்பு உலகக் கோப்பைத் தொடரின் 9 லீக் ஆட்டங்களில் பங்கேற்ற இந்திய அணி 9 போட்டியிலும் வெற்றி பெற்று, தோல்வியே காணாத அணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

நவம்.15-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் அரையிறுதியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது இந்திய அணி.

RELATED ARTICLES

Recent News