தேர்தல் ஆணையர் விவகாரம்…மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சராமாரி கேள்வி..!

தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் சராமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. ஐஏஎஸ் அதிகாரியான இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார். இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், தேர்தல் ஆணையர் அனூப் சந்திர பாண்டே இருக்கும்போது, புதிய தேர்தல் அணையராக கடந்த 21-ஆம் தேதி அருண் கோயல் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இது தொடர்பாக விசாரித்த கேஎம்.ஜோச்ப் தலைமையான அரசியல் சாசன அமர்வு, மத்திய அரசு வழக்கறிஞரிடம் சராமாரியான கேள்விகளை முன்வைத்தது. அதாவது காலியாக இருந்த தேர்தல் ஆணையர் பதவிக்கான அறிவிப்பை, நவம்பர் 17-ஆம் தேதி விசாரித்த பிறகே, நவம்பர் 18-ஆம் தேதி வந்துள்ளது. அதுவரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ளது.

மேலும் அரசுப்பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவரை எப்படி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்..? இவ்வளவு நாள் மத்திய அரசு என்ன செய்தது..? போன்ற பல்வேறு கேள்விகளை வைத்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை 29-ஆம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News