வரலாற்று கதையை கொண்ட திரைப்படங்கள், ரசிகர்களுக்கு பிடிக்காது என்ற கண்ணோட்டம் சினிமாவில் இருந்தது. ஆனால், பாகுபலி, ஏழாம் அறிவு, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள், அந்த கண்ணோட்டத்தை மாற்றின.
குறிப்பாக, பாகுபலி 1 மற்றும் இரண்டாம் பாகம், ரசிகர்களை பெருமளவில் ரசிக்க வைத்தது. இதனால், இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் இதுமாதிரியான முயற்சிகளை எடுக்க துணிந்துள்ளனர்.
அந்த வகையில், இயக்குநர் சிவா, நடிகர் சூர்யாவை வைத்து, கங்குவா என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் இப்படத்தை, ஸ்டியோ க்ரீன் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.
சமீபத்தில், இப்படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களையும் கவர்ந்திருந்தது. இந்நிலையில், இப்படத்தில் மிகமுக்கிய மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது, ஆரம்பத்தில் 10 மொழிகளில் படத்தை ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவில், படக்குழுவினர் இருந்தனர்.
ஆனால், தற்போது படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பின் காரணமாக, 48 மொழிகளில் டப்பிங் செய்து, உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளார்களாம்.
இந்திய சினிமா வரலாற்றிலேயே, முதன்முறையாக 48 மொழிகளில் டப்பிங் செய்யப்படும் திரைப்படம் இதுதான். இதன்மூலம், கங்குவா திரைப்படம், பிரம்மாண்ட சாதனையை படைத்துள்ளது.