இந்தியில் உருவாகியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. இந்தப்படத்தை கேரளாவில் ரிலீஸ் செய்ய அங்குள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தப்படம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் வெளியிட்டால் எதிர்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை அனுமதிக்க வேண்டாம் என அரசுக்கு மாநில உளவுத்துறை பரிந்துரை செய்துள்ளது.