Connect with us

Raj News Tamil

10 நிமிடங்களுக்கு விடாமல் காதலிக்கு ‘லிப்லாக்’….இறுதியில் காதலனுக்கு நேர்ந்த பரிதாப நிலை!!

உலகம்

10 நிமிடங்களுக்கு விடாமல் காதலிக்கு ‘லிப்லாக்’….இறுதியில் காதலனுக்கு நேர்ந்த பரிதாப நிலை!!

சீனாவை சேர்ந்த ஒரு இளம் காதல் ஜோடி ஒன்று ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஏரிப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு இருவரும் ‘லிப்லாக்’ எனப்படும் உதட்டோடு உதட்டு முத்தம் கொடுத்துள்ளனர்.

சுமார் 10 நிமிடங்களுக்கு விடாமல் முத்தம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து திடீரென்று காதலனின் காதில் ஊசி குத்துவது போன்று வலி ஏற்பட்டுள்ளது.

காதில் ஏற்பட்ட வலி நேரம் செல்ல செல்ல அதிகரித்ததோடு, அவரின் கேட்கும் திறனும் குறைந்துள்ளது. இதையடுத்து உடனடியாக இருவரும் மருத்துவ மனைக்கு சென்றனர். அங்கு காதலனுக்கு டாக்டர்கள் பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

அப்போது அவரது காதின் நடுப்பகுதியில் இருந்து வெளிப்புற பகுதியை பிரிக்கும் சிறிய மெல்லிய சவ்வு போன்ற பகுதியில் சிறு அளவிலான 2 துளைகள் இருப்பது தெரியவந்தது. அதுதான் அவரது காது வலிக்கு காரணம் என்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர். உணர்ச்சிவசப்பட்டு கொடுக்கும் முத்தம் காதுக்குள் காற்றழுத்தத்தில் விரைவான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்றனர்.

இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் முழுமையாக குணமடைய 2 மாதங்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் காதலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top