சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம், வரும் நவம்பர் 14-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த திரைப்படத்தை, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 10 மொழிகளில், ரிலீஸ் செய்ய உள்ளனர்.
இதனால், படத்தை பல்வேறு மொழிகளில் படக்குழுவினர் புரமோஷன் செய்து வருகின்றனர். இந்நிலையில், விசாகப்பட்டினம் பகுதியிலும், கங்குவா புரமோஷன் நிகழ்ச்சி நடந்துள்ளது.
அப்போது, நடிகர் சூர்யாவும், தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷனும் சந்தித்துக் கொண்டுள்ளனர். இந்த சந்திப்பு குறித்து சந்திப் கிஷன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “என்னுடைய முதல் ஹீரோ சூர்யா அண்ணா தான். வாரனம் ஆயிரம் படத்தில், 16-வது உதவி இயக்குநராக பணியாற்றியதில் இருந்து, தற்போது விசாகப்பட்டினம் கங்குவா புரமோஷன் நிகழ்ச்சியில் இவர் என்னை நடத்தியது வரை, அந்த மனிதர் எப்போதும் ஒரே மாதிரியாக தான் உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இரண்டு பேரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.