குஜராத் மாநிலம் துவாரகா நகரின் காவல் துறைக்குச் சொந்தமான மஹிந்திரா பொலிரோ கடந்த டிச.28ஆம் தேதி ஸ்டேஷன் வாசலில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த வாகனத்தை திருடி சென்ற நபர் ஒருவர் அந்தக் காரை வைத்து செல்பி எடுத்து இணையத்தில் பதிவு போட்டுள்ளார்.
இதுகுறித்து விசாரணையில் இறங்கிய போலீசார், கார் திருடுபோன 6 மணி நேரத்திற்குள் அந்த நபரை பிடித்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் அந்த நபரின் பெயர் மோகித் சர்மா எனத் தெரியவந்துள்ளது. மோகித் சர்மா மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் மோகித் சர்மாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.